What must we do to become truly saintly and pious?

by sssgc-srilanka
0 comment
What must we do to become truly saintly and pious?

අප ශාන්තිමය හා පින්වත් මිනිසුන් බවට පත් වීම සඳහා කළ යුතු දේ භගවාන් සමිඳුන් පැහැදිළි කරන්නේ වැරදි අවබෝධයන්ද තුරන් කරවමිනි.

ගෘහස්ත බව හා සන්‍යාසී බව අතර වෙනස එතරම් වැදගත් නොවේ. කසාවන් සිවුරක් දැරීමෙන් පමණක් දෙවියන්ගේ බැතිමතෙක් බවට පත් නොවේ. මන්ත්‍ර මිමිනීමෙන් පමණක් යමෙකුගේ පාපයන් සෝදා හැරීමට නොහැක. භගවත් ගීතාව දරමින් එහි එන පාඨ හඬ නගා කීමෙන් පමණක් පුණ්‍යවන්තයෙක් නොවේ. සිතිවිළි හා ක්‍රියා සමගාමී වන විට පමණක් යමෙක් සාධු වරයෙකු වේ. සාධු වරයෙක් යනු කවරහුද? සියල්ලන් තුළ යහපත හා පවිත්‍ර බව විභව වන හෙයින් සියල්ලෝ සාධු වරු වේ. බාහිර පෙනුමෙන් හා කසාවන් ඇඳුම් දැරීමෙන් නොව හදවත පවිත්‍ර කර ගැනීමෙන්ම සාධු වරයෙක් වේ. රාවණා සීතා දේවිය පහර ගැනීම සඳහා සාධු වරයෙකු සේ වෙස්වලා ගති. රාවණාගේ ඇඳුම ඔහුගේ පාපී චේතනාවන් ප්‍රදර්ශණය කිරීම වැළැක්වුවා පමණි. පාප ගති දුරස් කළ යුතු වේ. මේ කාර්යය සුළුවෙන් ආරම්භ කළද ප්‍රතිඵල මහත් වේ.
– Divine Discourse, Jan 07, 1998.

යමෙකු පවිත්‍ර ජිවිතයක් ගත කිරීම පුහුණු නොකර වෙනත් කුසලතා පමණක් ලබා දුනහොත් ඔහු තමන්ට මෙන්ම සමාජයටද අයහපත සිදු කරන අයෙක් වේ. ස්වාමි.

What must we do to become truly saintly and pious? Bhagawan lovingly clarifies and removes misconceptions for us today.

The distinction made between householders and sanyasis is not of real significance. The wearing of the ochre robe alone will not make a man a devotee of God. By the mere mouthing of mantras, one’s sins will not be washed away. Carrying the Gita and shouting slogans will not make one meritorious. Only the man whose thoughts and deeds are in harmony can be called a sadhu (a saintly person). Who are sadhus? Not merely those who don the ochre robe. All are sadhus. All beings have sadhutva (goodness and purity) inherent in them. They have to foster and manifest these qualities and not the external vesture. It is the purity of one’s thoughts which reveals one’s sadhutva. There is no need to put on the orange robe to become a sadhu. The heart must be pure. Ravana put on a guise of an ascetic to kidnap Sita. His garb only concealed his evil intent. It is the evil qualities that have to be given up. Even if the process is begun in a small way, it will result in great good. The start must be made when one is young.
– Divine Discourse, Jan 07, 1988.

When man is not trained to live a good and godly life, teaching him various skills and tricks, only makes him a danger to himself and to others. – BABA

நமது சிந்தனைக்கு பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் அமுதமொழி – ஏப்ரல் 15, 2024

 

ஒருவர் பின்பற்றும் வழியைப் பொறுத்து அவர் சந்நியாசி ஆகலாம் அல்லது சம்சாரி ஆகலாம். நான் சம்சாரி, சம்சாரி என எண்ணுவதும் அவருடைய பாவமே; நான் சந்நியாசி, சந்நியாசி என எண்ணுவதும் அவருடைய பாவமே. எண்ணங்களை நம்மோடு இணைத்துக் கொள்கிறோமே தவிர, தலையிலுள்ள உள்ள பாவங்களை நாம் கைவிட முயற்சி செய்வதில்லை. எனவே, காவி வஸ்திரத்தை அணிந்து கொண்டதால் மட்டுமே உள்ளங்கை நெல்லிக்கனி போல் பக்தி வந்துவிடாது; வாயினால் மந்திரங்களை உச்சரிப்பதால் மட்டுமே செய்த பாவங்கள் சிதறிப் போய்விடாது. கீதையை உரக்கப் படிப்பதால் மட்டுமே நம் வீட்டில் புண்ணியங்கள் வந்து சேர்ந்துவிடாது. சொல்கின்ற சொற்களுக்கும், செய்கின்ற செயல்களுக்கும் இசைவு இருப்பவரே சாது ஆவார். அகந்தை, பிறரைப் பழித்தல் ஆகிய தீயவற்றை அகற்றி, அனைத்து உயிரினங்களிலும் உறையும் சர்வேஸ்வரன் ஒருவனே என்ற பாவத்தை மனதில் நிறைத்துக் கொண்டால், அன்றே சாதுக்களின் சங்கம் அபிவிருத்தி ஆகும். காவி வஸ்திரம் அணிந்தவர் மட்டுமே சாது அல்ல, அனைவரும் சாதுக்களே. சாதுத்துவம் என்பது அனைத்து உயிரினங்களிலும் உள்ளது. அந்த சாதுத்துவத்தை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்; சாது வேஷத்தை அல்ல. எனவே, நம்முள் பவித்ரமான பாவங்களை நாம் பெருக்கிக் கொள்ள வேண்டும். இந்த பவித்ரமான பாவங்களே உண்மையான சாதுத்துவத்தை நிரூபிக்கும். எனவே, நாம் சாதுவாக ஆக வேண்டியதில்லை, வேஷத்தை தரித்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. இதயத்தை பவித்ரமாக்கிக் கொள்ள வேண்டும். ராவணேஸ்வரன் கூட சாதுவின் வேஷத்தை தரித்துக் கொண்டு வந்தான்; சீதையை அபகரித்தான். எனவே, இங்கு வேஷமா, துஷ்ட குணமா மூலகாரணம்? நம்மிடமிருந்து துர்குணங்களை விலக்கிக் கொள்ள வேண்டும். இது இன்று உலகமெங்கும் பரவ வேண்டும். ஒவ்வொரு மனிதனுள் இருக்கும் துர்குணங்கள் விலக்கப்பட வேண்டும். அப்படி துர்குணங்களை விலக்கிக் கொள்ளாமல், எத்தனை ஜபம், தவம், யக்ஞ யாகங்கள் செய்தாலும், எத்தனை வேதங்களை ஓதினாலும், எத்தனை சாஸ்திரங்களைப் படித்தாலும் பிரயோஜனம் இல்லை. எனவே, முதன்முதலில் நம்முள் உள்ள துர்குணங்களை நீக்கிக் கொள்ள வேண்டும். நாம் எவ்வளவு சிறிய உதவி பிறருக்குச் செய்தாலும் அதுவே மிகப் பெரிய அளவில் அபிவிருத்தி ஆகிவிடும். பூர்ண விசுவாசத்தை நாம் பெருக்கிக் கொள்ள வேண்டும். அதை சிறுவயதிலிருந்தே தொடங்க வேண்டும்.

– தெய்வீக அருளுரை, ஜனவரி 07, 1988

Related Posts

Download the Prasanthi Connect App now

  

@2022 - All Right Reserved. Designed and Developed by Vip Web Solutions